×

ரஷ்யாவின் இரவு நேர தாக்குதல் 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்: 4 பேர் பலி

கீவ்: உக்ரைனின் கீவ் நகர் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவால் ஏவப்பட்ட 35 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி உள்ளது. ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாம் உலகப்போரின்போது நாஜி ஜெர்மனியின் தோல்வியை குறிக்கும் பாரம்பரிய சிவப்பு சதுக்க நினைவு நாளையொட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெற்றி தின கொண்டாட்டத்தையொட்டி 21 நகரங்களில் ராணுவ அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிய நகரங்களாக மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.

ஆனால் டிரோன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கீவ் நகர் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இரவு நேரத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 35 டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. டிரோனின் பாகங்கள் விழுந்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகிளல் 127 இலக்குகள் மீது ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒடேசாவில் நடந்த குண்டு வீச்சில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

The post ரஷ்யாவின் இரவு நேர தாக்குதல் 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Kiev ,Ukraine ,Kiev, Ukraine.… ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு